போராட்டக்காரர்களை வெளியேறச் சொல்கிறார்கள் அலங்காநல்லூர் மக்கள்.. என்ன நடந்தது?

அலங்கநல்லுரில் நேற்றுவரை நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராடிக்கொண்டிருந்த மக்கள், இன்று பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என்று குறித்து விட்டனர். அதை விட போராட்டக்காரர்களை வெளியேறவும் கூறி வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டதால், மூன்றாவது ஆண்டாக 2017 ஆம் ஆண்தும் ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்ற சூழ்நிலையில் போராட்டம் ஆரம்பித்தது.

அலங்காநல்லூர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அங்கு கேட் கடை என்ற பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திநர். 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தை அதற்கு அடுத்தநாள் ஆரம்பித்தனர். அதிலிருந்து அந்த போராட்டம் ஆரம்பித்தது. சில நூரு பேருடன் ஆரம்பித்த போராட்டம் உச்ச ட்டமாக 6 லட்சம் பேர் வரை பங்குகொண்ட போராட்டமாக விரிவடைந்தது.

மாபெரும் போராட்டம்

மாபெரும் போராட்டம்

அதன் நீட்சியாக சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள், தங்கள் வாழும் பகுதியில் எல்லாம் போராட்டம் நடத்தினர். இது இறுதியில் உலகத் தமிழர்களின் போராட்டமாக உருவெடுத்தது. இந்த போராட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. இதன் மூலம், இந்திய வரைபடத்தின் அடியில் இருந்த தமிழ்நாடு , இந்தியாவின் பெருமை மிகு முகமாக மாறியது.

ஒரேநாளில் கிடைத்த அவசர சட்டம்

ஒரேநாளில் கிடைத்த அவசர சட்டம்

இப்படி எழுச்சியுடன் எழுந்த போராட்டத்தின் விளைவாக முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விரைந்தார். அதேநாளில் தமிழகம் திரும்பும்போது கையில் அவசர சட்டத்துடன் சென்னையில் கால்பதித்தார். இது ஒரேநாளில் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் அவசர சட்டத்தை பெற்று திரும்பிய பிறகு, கடந்த சனிக்கிழமை ஜல்லிக்கட்டு அலங்கநல்லூரில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடக்கவில்லை

ஜல்லிக்கட்டு நடக்கவில்லை

அதனால் ஞாயிறு அன்று அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழ்நிலையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் அங்கு ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க செல்வதாக செய்திகளும் அரசு அறிவிப்பும் வெளியானது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்வரை நேற்று காலையில் இருந்து மதியம் வரை உள்ளே அனுமதிக்கவில்லை.

முதல்வருக்கு எதிராக போராட்டம்

முதல்வருக்கு எதிராக போராட்டம்

அவர் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்கு ஆங்காங்கே குழிகள் தோண்டினர் . லாரிகளில் கரும்புகளை ஏற்றி சாலைகளை மறித்தனர். ஆண்கள் மனிதசங்கிலி அமைத்து சாலையை மறித்து யாரும் நுழையாத வண்ணம் செய்தனர். அதனையடுத்து ஆட்சியர் வீரராக ராவ் மூலம் பேசசுவார்த்தை நடத்த முயற்சி செய்தனர் அதிகாரிகள். ஆனால், இருசக்கரவாகனத்தில் ஆடசியார் ஊருக்குள் நுழைந்தும், அவரை ஊருக்குள் வர மக்கள் அனுமதிக்கவில்லை. இது நேற்று பிற்பகல் வரை இருந்த சூழ்நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறிய காட்சிகள்

மாறிய காட்சிகள்

போராட்டம் அலங்காநல்லூரில் 8ஆவது நாளாக இன்று நடைபெற்ற பொது அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களை பேசசுவார்த்தைக்கு அழைத்தனர். போராட்டக்காரர்கள் மறுக்கவே அவர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ஊர்க் கமிட்டி, எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பாதம்தொட்டு நன்றி சொல்லிக்கொள்கிறோம். அரசின் உதவியுடன் துணையுடன் பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடத்தி நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்த ஊர்க்கமிட்டி இத்தனை நாள் நடந்த போராட்டத்தில் பங்குகொள்ளவில்லை என ஊர்க்காரர்கள் செய்திசானல்களுக்கு பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீது தாக்குதல்

பெண்கள் மீது தாக்குதல்

அலங்காநல்லூர் போராட்டத்தில் ஆரம்பம் முதல்நாளிலிருந்தே பெண்கள் தன அதிகளவில் பங்கேற்று போராடி வருகினறனர். ஆனால், இன்று காலை முதல் பெண்களை குறிவைத்துதான் போலீஸ் தடியடி நடத்தியது. அந்த தடியடியில் முதியவர்கள், இளம்பெண்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் தாக்கப்பட்டனர். இதில், ஒரு பெண் அதிக தாக்குதலுக்கு உள்ளாகி அவருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. அப்போதும்ம்கூட, போராட்டக்காரர்களை போலீஸ்காரர்களும் கற்களை வீசிக்கொண்டிருந்தனர்.

சரமாரி தடியடி

சரமாரி தடியடி

அலங்காநல்லூர் கேட் கடை பகுதியில் இன்று காலை 500 பேருக்கும் மேல் இருந்த போராட்டக்காரர்கள், பிற்பகல் 12 மணிக்கு ஒருவர் கூட இல்லை. அனைவர் மீதும் தடியடி நடத்தி போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். இப்போது அந்த இடம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் ஊர்மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் பொரட்டிக்கொண்டிருந்த போராட்டக்காரர்களை, அந்த ஊர் மக்களை வெளியேற சொல்லி யார் நிர்பந்தப்படுத்துகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

நேற்று வரை, முதல்வரை ஊருக்குள் நுழைய அனுமதிக்காத மக்கள், இப்போது போராட்டக்காரர்களை வெளியேறச் சொல்வதற்குப் பின்னால் என்ன நடந்துள்ளது என்பது யாரும் அறியாத புதிராகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+