சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கத்திக்குத்தால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரயில் நிலையம் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவருக்கு 2 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.

In Chennai college students beat each other

மாணவர்களின் மோதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடி விட்டனர்.

தப்பியோடிய மாணவர்களை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக் கல்லூரி மற்றும் தியாகராய கல்லூரி மாணவர்கள் ஆவர் என தெரியவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Chennai college students beat each other. In this fight one student stabbed by others. Police looking after them.
Please Wait while comments are loading...