தனுஷின் அங்க அடையாளங்கள் அழிப்பு.. திரையுலகினர் அதிர்ச்சி !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தனுஷ். நடிகரைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

In dhanush body there is some marks destructed

இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த, மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க நேரில் ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது. இதை அறிந்த திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In dhanush body there is some marks destructed by laser treatment says Madurai hospital medical report, Actor and actor's Shock that
Please Wait while comments are loading...