கள்ளக்குறிச்சி ஜவுளிக்கடையில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை - வீடியோ
கள்ளக்குறிச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகள் வீடுகள் அலுவலகங்கள் மட்டுமில்லாது தனியார் தொழில் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த மே மாதம் காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த ஜவுளி நிறுவனம் பல ஆண்டுகளாக வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்பதால் சோதனை மேற்கொள்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications