கன்னியாகுமரியில் மாணவர் கையை பிளேடால் கீறிய இளைஞர்... ப்ளூவேல் விபரீதமா?
கன்னியாகுமரி, குலசேகரத்தில் மாணவர் கையை இன்னொரு இளைஞர் பிளேடால் கீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளூவேல் விளையாட்டாஅல் இந்த விபரீதம் நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: குலசேகரத்தில் மாணவர் ஒருவர் கை அறுபட்ட நிலையில் தெருவில் மயங்கிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ப்ளூவேல் விளையாட்டால் இந்த விபரீதம் நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மற்றும் புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியாகியுள்ளனர். மேலும் வங்கி பெண் ஊழியர் இந்த விளையாட்டால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனையடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் நாகக்கோடு பகுதியில் உள்ள ஒரு சந்துக்குள் கை அறுப்பட்ட நிலையில் ரத்தத்துடன் மயங்கி கிடந்தார். அதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவரின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க அவர் அங்கு பதற்றத்துடன் வந்தார்.
உடனே, மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது தந்தைக்கு இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவரிடம் ப்ளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதமா என விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர் புளூவேல் விளையாட்டு எதுவும் விளையாடவில்லை என்று கூறினார்.
மேலும் வகுப்பில் இருந்து பாட்டி வீட்டுக்கு சென்றபோது தன்னை ஒரு வாலிபர் பின்தொடர்ந்ததாகவும் அவர் திடீரென தன்னை மறித்து கையை பிடித்து இழுத்து பிளேடால் கீறியதால் மயங்கி விழுந்ததாகவும் கூறினார். போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications