ஓவர் பெர்ஃபாமன்ஸ்! செய்தியாளரை தாக்கிய செக்யூரிட்டி ஆபிஸர்! ஏன் கையை வச்ச? மடக்கிய உ.பி.க்கள்!
மயிலாடுதுறை: முதலமைச்சர் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் செய்தியாளரை செக்யூரிட்டி ஆபிஸர் ஒருவர் தாக்கிய நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஃபாரி அணிந்துக் கொண்டு முறைப்புடன் காட்சியளித்த அந்த செக்யூரிட்டி ஆபிஸரை சுற்றி வளைத்த திமுக நிர்வாகி ஒருவர், ஏன் கையை வச்ச, யார் கொடுத்த அதிகாரம் இது என ஆவேசம் காட்டியதால் அந்த இடமே பரபரப்பானது.
Recommended Video
இதையடுத்து அந்தக் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் கான்வாயில் வந்த இன்னோவா கார் படிக்கட்டில் ஏறி நின்று தொங்கியபடி அங்கிருந்து எஸ்கேப் ஆனார் அந்த செக்யூரிட்டி ஆபிஸர்.

உள்ளூர் செய்தியாளர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம், திருக்கடையூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். அதேபோல் இயந்திர குறுவை நடவையும் முதல்வர் நேரடியாக பார்வையிட்டார். முதலமைச்சரின் வருகை மற்றும் ஆய்வு குறித்த செய்திகளை சேகரிக்க செய்தி நிறுவனங்களின் உள்ளூர் செய்தியாளர்கள் அங்கு வழக்கம் போல் திரண்டிருந்தனர்.

செய்தி விளம்பரத்துறை
அப்போது அங்கு ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனம் மற்றும் நாளிதழின் செய்தியாளர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருக்கிறது. மேலும் முதல்வருடன் வந்திருக்கும் ஊடகக் குழுவினர் முதல்வரின் நிகழ்ச்சிகளை படம்பிடித்து தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி விளம்பரத்துறைக்கு அனுப்பி விடுவார்கள் என்றும் அதனால் மற்றவர்களுக்கு இங்கு அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

படம் பிடிக்க முயற்சி
இருப்பினும் ஒரு செய்தியாளர் முதல்வர் நிகழ்ச்சியை படம் பிடிக்க முயற்சித்துள்ளார். அதனை கண்டிப்புடன் வேண்டாம் எனக் கூறியிருந்தால் பரவாயில்லை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டி ஆபிஸர் ஒருவர் அந்த செய்தியாளரை மூர்க்கத்தனமாக தள்ளிச் சென்று தாக்குகிறார். இதனை பார்த்த திமுக நிர்வாகி ஒருவர் மனம் கேட்காமல், ஏன் அவர் மீது கையை வச்ச? யார் கொடுத்த அதிகாரம் இது என ஆவேசமாக பொங்கி எழுகிறார்.

கண்மூடித்தனமாக
அவரது கேள்விக்கு விடையளிக்காமல் முழித்துக்கொண்டே கான்வாயில் வந்த இன்னோவா காரில் ஏறி அங்கிருந்து செல்கிறார் அந்த செக்யூரிட்டி ஆபிஸர். பொதுவிடங்களில் முதல்வரை காண இப்படித்தான் பலரும் முண்டியப்பார்கள். ஆனால் அதற்கென்று அவர்களை இப்படி கண்மூடித்தனமாக தாக்கும் வகையில் நடந்துகொள்ளும் செயல் காவல்துறைக்கு மட்டுமல்ல ஆட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications