ரஜினிகாந்த்தின் அரசியலுக்கு விதை போடுகிறதா காலா?
Recommended Video

சென்னை: காலா திரைப்படம் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய கட்சி துவங்குவதாக, கடந்த டிசம்பர் மாதம், ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, வெளியான முதல் திரைப்படம் காலா. இதையடுத்து, படத்தில் அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசுகையில், படத்தில் அரசியல் பேசப்படும், ஆனால், இது அரசியல் படம் இல்லை என்று தெரிவித்தார்.

திட்டம் இல்லை
இயக்குநர் பா.ரஞ்சித் நிருபர்களிடம் கூறுகையில், "திரைப்படம் எடுத்து முடிவடையும் தருவாயில்தான் ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டம் குறித்து வெளிப்படுத்தினார். அதுவரை அதுபோன்ற ஐடியாவை ரஜினியிடம் பார்க்கவில்லை" என்றார் அவர்.

கமல் விமர்சனம்
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியபோது, ரஜினிகாந்த் கட்சியோடு தான் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் அவரது நிறம் காவி என்றும் விமர்சனம் செய்தார். ஆனால் காலா படம் அதற்கு பதிலடி தரும் வகையில் வந்துள்ளது. கருப்பு சட்டையுடன் காட்சியளிக்கும் ரஜினிகாந்த், ஏழைகளுக்காக கார்பொரேட்டுகளை எதிர்க்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் புரட்சி
பல்வேறு புரட்சி பாடல்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இது அரசியலுக்கு முன்பாக தனது காவி வண்ண விமர்சனத்தை உடைப்பதாக அமையும் என்பது ரஜினிகாந்த் கருத்தாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பிம்பம் உடைபட்டது
ஆனால், தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தியதன் மூலம், காலா படத்தால் உருவாக்க நினைத்த பிம்பம் உடைபட்டுவிட்டது என்று அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications