கபாலி கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது: பால் முகவர் சங்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்த்தின் கபாலி படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பால்முகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னையில் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது: முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் நாளில் சில இடங்களில் பால் முகவர்களிடம் இருந்து, ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளது. ‘கபாலி' படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவிடவேண்டும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications