இதப் பார்ரா... 200 டீக்கடைகளுக்கு மோடி பெயர்.. மளிகைக் கடைகளுக்கும் வைக்கப் போகிறார்களாம்!!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையைச் சேர்ந்த நமோ பேரவை என்ற அமைப்பு, 200 டீக்கடைகளுக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளது.

இந்த நமோ பேரவையானது இப்போதுதான் பிறந்துள்ளது. மோடி பெயரில் தொடங்கப்பட்டாலும் கூட இது அரசியல் சார்பற்றதாம்.. அதன் அமைப்பாளர்கள் சொல்கிறார்கள்.

இவர்கள் மோடி பெயரை டீக்கடைகளுக்கு வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம். அடிப்படையில் ஆரம்பத்தில் மோடி டீக்கடையில் வேலை பார்த்தவர் என்பதால் இப்படி டீக்கடைகளுக்குப் பெயர் வைக்கிறார்களாம்.

எல்லோரும் 'யூத்'...

எல்லோரும் 'யூத்'...

இந்த நமோ பேரவையானது இளைஞர்களின் அமைப்பாகுமாம். இவர்களின் ஒரே லட்சியம் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதுதான்.

டீக்கடைகளுக்கு மோடி பெயர்

டீக்கடைகளுக்கு மோடி பெயர்

முதல் கட்டமாக இவர்கள் நரேந்திர மோடியின் பெயரை டீக்கடைகளுக்கு வைக்க முடிவு செய்துள்ளனர்.

200 மோடி டீக்கடைகள்

200 மோடி டீக்கடைகள்

முதலில் 200 கடைகளுக்கு மோடியின் பெயைரச் சூட்ட முயற்சி எடுத்துள்ளனராம். தமிழகம் முழுவதும் 200 கடைகள் மோடியின் பெயரில் டீ விற்குமாம்.

ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார்

ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார்

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பிரவீன் சீனிவாசன் இதுகுறித்துக் கூறுகையில், ஏற்கனவே ஈரோடு மாவட்டம் சித்தூரில் ஒரு டீக்கடைக்கு மோடி பெயர் வைக்கப்பட்டு விட்டது. மேலும் 7 கடைகள் கோவையில் மோடி பெயரைத் தாங்கவுள்ளன.

எந்தக் கட்சியிலும் நாங்கள் இல்லையாக்கும்...!

எந்தக் கட்சியிலும் நாங்கள் இல்லையாக்கும்...!

நாங்கள் எந்தக் கட்சிக்கும் சார்பானவர்கள் அல்ல. அரசியல் சார்பற்ற இயக்கம் இது. மோடி பிரதமராக உழைக்கிறோம். இளைஞர்களின் அமைப்பு இது.

கூட்டம் போடுவோம்ல...!

கூட்டம் போடுவோம்ல...!

டீக்கடைகளுக்குப் பெயர் சூட்டுவது தவிர மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தவும் தீர்மானித்துள்ளோம். மோடி பிரதமராக வேண்டிய அவசியத்தை இக்கூட்டங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கவுள்ளோம்.

பலசரக்குக் கடைகளுக்கும் பெயர் வைப்போம்ல...!

பலசரக்குக் கடைகளுக்கும் பெயர் வைப்போம்ல...!

பல டீக்கடைக்காரர்கள் மோடி பெயரை தங்களது கடைகளுக்கு வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல அடுத்து மளிகைக் கடைகளுக்கும் மோடி பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். பல கடைக்காரர்கள் இதுதொடர்பாக ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

மாற்றம் வரணுங்க...!

மாற்றம் வரணுங்க...!

மாற்றத்திற்கான நேரம் இது. மாற்றம் வந்தேயாக வேண்டும் என்றார் அவர்.

நமோ கீதம் ...!

நமோ கீதம் ...!

இந்த அமைப்பின் சார்பில் நமோ கீதம் என்ற பெயரில் ஒரு தேசிய கீதம் ரேஞ்சிலான பாட்டு சிடியும் வெளியிடப்படவுள்ளது. இது மோடி புகழ் பாடும் பாட்டை உள்ளடக்கியதாகும். இதை பாஜக தலைவர்கள் முன்னிலையில் வெளியிடவுள்ளனராம்.

அப்படீன்னா....!!??

அப்படீன்னா....!!??

அரசியல் சார்பற்ற அமைப்பு என்கிறார்கள்.. ஆனால் மோடி பெயர் வைக்கிறார்கள்.. நமோ கீதம் தயாரித்துள்ளார்கள்.. அதை பாஜக தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்போகிறார்கள்... இடிக்கிறதே சீனி??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+