பெயருக்குதான் அதிமுக அரசு.. தமிழகத்தை ஆள்வது பாஜக... விளாசிய சீமான்!
தமிழகத்தில் அதிமுக அரசு என்றுதான் பெயர் ஆனால் பாஜகதான் ஆள்கிறது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: தமிழகத்தில் அதிமுக அரசு என்றுதான் பெயர் ஆனால் பாஜகதான் ஆள்கிறது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் தமிழகத்தை இன்னொரு சோமாலியாவாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் சீமான் சாடினார்.
கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நேற்று சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர் கிராம மக்கள்தான் முதலில் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர் அதனாலேயே போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறினார்.

பொறுப்பற்றதனமானது
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கதிராமங்கலம் தடியடி தொடர்பாக முதல்வர் பேசியிருப்பது பொறுப்பற்றதனமானது என சாடினார் அங்கு நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அறவழியில் போராட்டம்
குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. எனவே மக்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகளை அனுப்பி மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் சீமான் தெரிவித்தார்.

சோமாலியாவாக மாற்ற முயற்சி
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் தமிழகத்தை இன்னொரு சோமாலியாவாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் சீமான் குற்றம்சாட்டினார். மக்களின் கருத்தை கேட்டு தான் திட்டங்களை முடிவு செய்வோம் என கூறுகிறார்கள். ஆனால் மக்கள் எதிர்க்கும் திட்டத்தை செயல்படுத்த எதற்காக முயற்சி செய்கிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆள்வது பாஜகதான்
மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசு மவுனமாக இருக்கிறது. பெயர் தான் அதிமுக அரசு ஆனால் ஆள்வது பாரதிய ஜனதா அரசு என்றும் சீமான் விளாசினார். கதிராமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கதிராமங்கலம் சென்று தான் போராட வேண்டும் என்றில்லை. தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தும் கதிராமங்கலம் மக்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் சீமான் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications