இந்த லேடி, எங்க டாடி, குஜராத் மோடி: பிரச்சார சுவாரஸ்யங்கள்
சென்னை: டாடி, லேடி, மோடி பற்றிய பேச்சுக்களுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.
டி. ராஜேந்தர் தான் ரைமிங்காக படங்களில் வசனம் பேசுவார். ஆனால் தற்போது என்னவென்றால் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கூட அது போன்ற ரைமிங் வசனங்களை கேட்க முடிகிறது.
இதை ஆரம்பித்து வைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

லேடி
திங்கிட்கிழமை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள லேடி நிர்வாகத்தில் குஜராத்தின் மோடியை விட சிறந்தவர் என்றார். அதற்கான புள்ளி விவரங்களையும் அவர் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு
ஜெயலலிதாவின் பேச்சு பற்றி பாஜக மூத்த தலைவரான வெங்கையா நாயுடு கூறுகையில், லேடி லேடி தான், மோடி மோடி தான். அதில் சந்தேகமே இல்லை. லேடி மாநிலத்திற்கு பொருத்தமானவர் அதனால் தான் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மோடி நாட்டை ஆள பொருத்தமானவர் என்றார்.

ஸ்டாலின்
புதுக்கோட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மோடியோ, லேடியோ இல்லை எங்கள் டாடி தான் மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுபவர் என்றார்.

விஜயகாந்த்
ஜெயலலிதா, ஸ்டாலின் மட்டும் தான் லேடி, மோடி, டாடி என்பார்களா என்று இதோ தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தன் பங்குக்கு தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்த லேடி வேண்டாம் மோடி தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications