திருப்பூர் அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் மரணம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசு பேருந்தும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட நல்ல போக்குவரத்து வசதி இருந்தும் சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் நடக்கிறது.

In Tiruppur Amni van and govt. bus hit on each other and 3 died

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, வேகமாக வண்டியை இயக்குவது, சாலை விதிகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அரசு பேருந்தும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆம்னி வேனில் பயணம் செய்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுக்கியது.

இந்த விபத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Vellakoil government bus and car hit on directly and 3 died.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற