திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்கள் கைது..துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பபரபரப்பு..
திருப்பதி: சந்திரகிரி அருகே வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே மூங்கில்பட்டு என்னும் இடத்தில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டியதாக சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, செம்மரம் வெட்டிய கும்பல் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானத்தை நோக்கி அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிலர் தப்பி ஓடி விட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என திருப்பதி வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கடப்பாவில் வாகன சோதனையின் போது 8 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் மற்றும் 4 கார், ஒரு லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். செம்மரம் கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications