பிகில் வசூல் என்ன? உங்களுக்கு எவ்வளவு வருமானம்.. விஜயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட அதிகாரிகள்!
வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜயிடம் பிகில் படம் தொடர்பாக நிறைய கேள்விகளை கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜயிடம் பிகில் படம் தொடர்பாக நிறைய கேள்விகளை கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரிடம் நேரில் சம்மன் அனுப்பினார்கள். அதோடு தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதையடுத்து விஜயின் பண்ணை வீட்டில் நேற்று இரவு முழுக்க சோதனை நடந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

என்ன சோதனை
இந்த நிலையில் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். முக்கியமாக பிகில் படத்தின் வசூல் குறித்து நிறைய கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். பிகில் திரைப்படம் 180 கோடி பொருட் செலவில் உருவாவதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தெரிவித்தது. இந்த படம் விஜய் வாழ்நாளில் பெரிய ஹிட் படமாக உருவெடுத்தது. பல மாநிலங்களில் இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி மேல் கேள்வி
மற்ற எந்த படத்திற்கும் இல்லாத வகையில் பிகில் படத்திற்கான தமிழக, வெளி மாநில, டிஜிட்டல் உரிமைகள் விற்பனையாகி இருக்கின்றன.இதனால் இந்த படம் மொத்தமாக 330 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் அதிக வசூல் பெற்ற படங்களில் பிகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுதான் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மூக்கு வியர்க்க காரணம்.

வசூல் நிலவரம்
இந்த வசூல் தொடர்பாக விஜயிடம் கேள்வி கேட்டுள்ளனர். இந்த வசூல் பணம் யாருக்கு எல்லாம் கொடுக்கப்பட்டது. ஏஜிஎஸ் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களின் ஒப்பந்ததாரர்கள் யாரெல்லாம். பொதுவாக ஏஜிஎஸ் பணம் எங்கெல்லாம் கொடுக்கப்படும் என்று கேட்டு இருக்கிறார். விஜயின் ஆடிட்டரும் இந்த கேள்விகளின் போது உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் எப்படி
அதோடு விஜயிடம் பிகில் படத்தின் சம்பளம் குறித்தும் கேட்டு இருக்கிறார்கள்.பிகில் படத்திற்குத்தான் விஜய் தன் வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது. இதற்கு அவர் கட்டிய வருமான வரி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை வருமானமாக பெற்றார். எவ்வளவு வருமான வரி கட்டினார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications