ரசிகர்கள் வர வாய்ப்பு.. விஜய் வீட்டின் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு!
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதால், அவரின் வீட்டு முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிற்கிறார்கள்.
நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருக்கும் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். தங்களுடன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.

என்ன விசாரணை
விஜய் வீடடில் நடக்கும் இந்த ரெய்டிற்கு அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையம் முழுக்க இதற்காக அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்ளும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு ஆதரவாக இணையத்தில் இவர்கள் பேசி வருகிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர்
இதனால் டிவிட்டரில் நாங்கள் விஜயுடன் உடன் நிற்கிறோம் என்று பொருள்படும் வகையில் #WeStandWithVIJAY என்ற டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேக்கில் விஜய்க்கு ஆதரவாக பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். விஜய் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறார். அவரின் அரசியல் ஆசையை முடக்கும் வகையில் இப்படி செய்கிறார்கள். திட்டமிட்டு செய்யப்படும் மோசமான நடவடிக்கை இது என்று அதில் டிவிட் செய்து வருகிறார்கள்.

பண்ணை வீடு
தற்போது விஜய் பண்ணை வீட்டில் சோதனை நடக்கிறது. பனையூரில் உள்ள வீட்டில் வைத்து நடிகர் விஜயிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனால் அங்கு ரசிகர்கள் குவிய வாய்ப்புள்ளது என்கிறார்கள். விஜய்க்கு ஆதரவாக அங்கு ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது. வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் அங்கு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

போலீசார்
இதனால் தற்போது விஜய் வீட்டின் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், மொத்தம் 7 போலீசார் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3 சிஆர்பிஎப் படை வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலைக்கு மேல் கூடுதலாக இப்படை வீரர்கள் குவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் விஜய் ரசிகர்கள் யாரும் விஜய் வீட்டு பக்கம் வர கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications