தினகரன் கோஷ்டி அலறல்... சிஆர்பிஎப் வீரர்கள் சகிதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி சோதனை!

வருமான வரித்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், சொந்த ஊரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தினகரன் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் அணியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆனையத்தில், தினகரன் அணியினர் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்கின்றனர் என்று புகார் குவிந்ததையடுத்து, இந்த ரெய்டு படலம் தொடங்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், மற்றும் புதுக்கோட்டையில் அவரது ஊரான இலுப்பையூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Income Tax department officials raid in Minister Vijaya baskar's house

மேலும் சசிகலா, தினகரன் ஆதரவாளர் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் வீடு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ளது. அங்கும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தினகரன் அணியைச் சார்ந்தவர்களின் வீடுகளில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது ஆளுங்கட்சியினரை கலக்கமடையச் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+