சென்னையில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ7.5 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னையில் 23 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை : 23 இடங்களில் வருமான வரி சோதனை
சென்னை: காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத ரூ7.5 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான ஜவுளிகடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நகை கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை வேப்பேரியில் டாக்டர் ஒருவரது இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காந்தி பேப்ரிக்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்டவைகளும் வருமான வரி சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இச்சோதனைகளில் கண்ணில் வராத ரூ7.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications
