பக்கா ஆதாரங்களுடன் ராம மோகன ராவ் வீட்டில் சிக்கிய டைரி.. கலக்கத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள்
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டின் போது முக்கிய டைரி சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டின் போது முக்கிய டைரி சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர். விடிய விடிய 24 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

இதில் பல லட்சம் ரூபாய் பணம், கணக்கில் வராத தங்க நகைகள், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் ரெய்டின் போது முக்கிய டைரி ஒன்று சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான தொடர்பு குறித்த பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
விசாரணையில் ராம மோகன் ராவ் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications