Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரில் தாக்கப்பட்ட ஐடி அதிகாரிகள்! ஜாமீன் பெற்ற திமுகவினருக்கு சிக்கல்? மதுரை ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் தான் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் காரை உடைத்தவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 4 அதிகாரிகள் காயமடைந்தனர்.

Income tax officials filled petition to cancel the bail for 19 people who attacked them

இதுகுறித்த வருமான வரித்துறையினர் அளித்த புகாரில் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பேரை கைது செய்தனர். திமுக கரூர் மாநகராட்சி வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மேயரின் உறவினருமான பூபேஷ், ஷாஜகான், சிவபிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், ரஜினி சிவா, கரூர் மாநகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் லாரன்ஸ், அவரது சகோதரர் ரீகன், 16வது வார்டு கவுன்சிலர் பூபதி உள்பட மொத்தம் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் சிலருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்பட சிலரது வீடுகளில் சோதனை நடத்தினோம். கணக்கில் வராத ரூ.1 கோடிக்கும் அதிக பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 11 மணிநேரம் சோதனை நடந்தது. அப்போது ஏராளமானவர்கள் கூடி மோசமாக பேசி, தாக்கவும் செய்தனர்.

லேப்டாப், 5 பென் டிரைவ் ஆகியவற்றை பறித்து சென்று அதில் உள்ள தகவல்களை அழித்தனர். இந்த வேளையில் தமிழக போலீஸாரின் உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. மறுநாள் சிஆர்பிஎப் வீரர்களின் உதவியுடன் சோதனை நடத்தினோம். இதுதொடர்பான வழக்கில் பலரை போலீசார் கைது செய்த நிலையில் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வருமான வரித்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டாலும் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இது சரியானதாக நாங்கள் கருதவில்லை. எனவே இந்த வழக்கில் 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறையினரின் மனு தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் தான்தோணிமலை, உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஜாமீன், முன்ஜாமீன் பெற்ற 19 பேர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+