பழைய 500 ரூபாய் மாற்றுவதிலும் முறைகேடு.. சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 8 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதில் முறைகேடு நடந்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து, சென்னையில் 8 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தியாவில் இதுவரை உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி திடுதிப்பென அறிவித்தது. இதனால் சாதாரண பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், லட்சாதிபதிகளுக்கோ கோடிஸ்வரர்களுக்கோ எந்த வித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. மேலும், பாதுகாப்பாக பணத்தை மாற்றும் வித்தையையும் கற்று வைத்துள்ளதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைவுதான்.

என்றாலும், வெள்ளிக்கிழமை பழைய 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றுவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால் சென்னையில் மொத்தம் 8 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் ரொக்கத்திற்கு பதிலாக தங்கத்தை மாற்றிக் கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால், பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதே போன்று ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடும் நபர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் போது
நவம்பர் 8ந் தேதி நள்ளிரவு முதல் சி.சி.டி.வி. பதிவுகளை நகைக்கடைகள் ஒப்படைக்க வேண்டும் எனவும் வருமான வரித்துறையினர் கேட்டுள்ளனர்.சில ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி, மும்பை மாநகரங்களை அடுத்து தற்போது சென்னையிலும் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications