ஜெ. அடிக்கடி ஓய்வெடுத்த, கொடநாடு எஸ்டேட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை
நீலகிரியில் இருக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நீலகிரி: நீலகிரியில் இருக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல் சென்னையில் மொத்தம் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருக்கின்றனர்.
சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. காலை 7.30 மணியில் இருந்து கொடநாட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இது மறைந்த முதல் ஜெயலலிதா ஒய்வு எடுக்க செல்லும் இடம் என்பது குறிப்பிடதக்கது.
அதுமட்டும் இல்லாமல் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஜெயா டிவி, மன்னார்குடி தினகரன் வீடு, காமராஜ் வீடு, நமது எம்ஜிஆர் பத்திரிகை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications