டெங்கு காய்ச்சலுக்கு பலியான 4 வயது குழந்தை.... உறவினர்கள் சாலை மறியல்: வீடியோ
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலுக்கு பலியான குழந்தை பூஜாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்: டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை உடலை தேசிய நெடுஞ்சாலையில் கிடத்தி உறிவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சில நாட்களுக்கு முன் மணப்பாறைச் சேர்ந்த சின்னப்பொண்னு என்பவர் டெங்கிக் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை தூக்கிச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் இல்லாதால் தந்தையும் மகனுமே ஆம்புலன்ஸ்க்கு தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்தது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர் மணவாசியைச் சேர்ந்த பூஜா என்ற நான்கு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் குழந்தை இறந்தது எனக் கூறி உறவினர்கள் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர்.
அதில் அதிகமானோர் சிறுவர், சிறுமியராக இருப்பது வேதனை. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினிக்கு மட்டும் 16 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications