சென்னையில் இன்றும், நாளையும் முன்பதிவில்லாமல் கேஸ்... இன்டேன் கேஸ் சிறப்பு முகாம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் முன்பதிவில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கனமழையால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் முன்பதிவில்லாமல் கேஸ் சிலிண்டர் விநியோகிக்க டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இதில், சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்த இன்டேன் வாடிக்கையாளரும் நேரடியாக பணம் செலுத்தி கேஸ் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் சென்னையில் 5 இடங்களில் நடைபெறுகிறது.
இன்டேன் வாடிக்கையாளர்கள், தங்களிடம் காலியாக உள்ள எரிவாயு உருளைகளைக் கொடுத்து, வாடிக்கையாளர் எண், விநியோகஸ்தரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு பணத்தை கொடுத்து கேஸ் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் விபரங்கள் பின் வருமாறு:
சுபம் கேஸ் ஏஜென்சி - மணலி புது நகர் - பாரத் ஸ்டேட் பாங்கு எதிரில் - தொடர்பு எண்கள்- 9444465191, 7358181660
ஸ்ரீ செல்லா கேஸ் ஏஜென்சி - தாம்பரம் ( கிழக்கு) - சொலையூர் காவல் நிலையம் எதிரில்- 9884056714, 9884097537
பட்டம்மாள் கேஸ் ஏஜென்சி - தாம்பரம் ( மேற்கு)- முடிச்சூர் கிறிஸ்தவ கோயில், சிவன் கோயில் அருகில்- 9941008205, 9884454397
பிரசன்னா கேஸ் ஏஜென்சி- கொரட்டூர் ( வடக்கு) - ஆர்சிட் ஸ்பிரிங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகில்- 9283103281, 9710190909
ஸ்ரீ அம்பிராம் இன்டேன் - சோழிங்கநல்லூர் - ஆவின் பாலகம் அருகில்- 9094434881, 044-24501333
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications