ஏலியன்ஸை என்கவுண்டர் செய்யப்போகும் விஜயகாந்த்...
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து தூக்கியடிக்கும் விஜயகாந்த் தி இன்டிபெண்டன்ஸ் டே படத்தில் வரும் ஏலியன்ஸ்களை என்கவுண்டர் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து உருவாக்கப்பட்ட கற்பனைதான் இது.
இன்டிபெண்டன்ஸ் டே டிரைலரை விஜயகாந்தை வைத்து புது வீடியோ ஒன்றை புட் சட்னி என்ற குழு யூடியூபில் பதிவேற்றியுள்ளது. பதிவேற்றிய சில மணி நேரங்களிலேயே வீடியோ வைரலாகியுள்ளது.
ஜில் ஜங் ஜக் , மிருதன் ஆகிய படங்களுக்கு இந்த நிறுவனம் தயாரித்த வீடியோ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. விஜயகாந்த் வாய்ஸ்சில் வந்த 'குங்குமப்பூ போண்டா' என்ற இந்த வீடியோ... ஏற்கனவே 5லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்தது.
இந்த வீடியோ மூலம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்போது தி இன்டிபெண்டன்ஸ் டே படத்தின் ட்ரெயிலரை மீண்டும் கேப்டன் விஜயகாந்துடன் கோர்த்து விட்டு பஞ்சாமிருதம் செய்துள்ளனர். விஜயகாந்த் பேசும் ஸ்பெஷல் டயலாக்குகள் இது ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. அவர் பேசிய பஞ்ச் வசனங்களை பயன்படுத்தியுள்ளனர். பார்த்துட்டு சொல்லுங்க மக்களே...
இந்த வீடியோக்களை பார்த்து விட்டு ஐயம் பாவம்.. வேண்டாம் விட்ரு நான் அழுதுருவேன் என்று விஜயகாந்த் வேறு வீடியோ வெளியிடாமல் இருந்தால் சரிதான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications