மதம், மது, ஜாதிய வெறியை வேரறுப்போம்: வேல்முருகன் சுதந்திர தின வாழ்த்து
சென்னை: நாடு விடுதலை பெற்று மக்களுக்கான ஜனநாயகம் உதயமான நாள் ஆகஸ்ட் 15. இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடு விடுதலை பெற்று மக்களுக்கான ஜனநாயகம் உதயமான நாள் ஆகஸ்ட் 15. இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசம் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்களால் வேறுபட்டாலும் நாம் இந்தியர் என்கிற ஒற்றுமை உணர்வே நமது தேசத்தை வல்லரசாக்கும்.

இந்திய விடுதலைப் போரில் புரட்சியாளர்களையும், தியாகப் பெருமக்களையும் ஈந்து தாரை வார்த்துக் கொண்ட ஈக மண் நமது தமிழகம். இந்திய துணைக்கண்டத்திலேயே ஆங்கிலேய வல்லாதிக்கத்தை வேரறுக்க முதல் ஆயுதமேந்திய புரட்சி நிகழ்ந்த மண் தமிழக மண்.
ஆங்கிலேயரின் படைகளை தகர்க்க வெடிமருந்து கிடங்கில் நெருப்போடு குதித்த உலகின் முதல் தற்கொடைதாரி வீரத்தாய் குயிலி பிறந்த மண் தமிழகம். ஆனால் நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் தமிழகம் தமது வாழ்வுரிமைகளுக்காக அன்றாடம் இந்தியப் பேரரசிடம் போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் அத்தனை உரிமை பிரச்சனைகளும் அப்படியே தீர்க்கப்படாமல் இருக்கின்றன; ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மது என்கிற புதிய அடிமை விலங்கு சமூகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
சமூகத்தை மாய்க்கும் மதுவை விட்டொழிப்போம்;
மதுவைவிட மா கொடிய ஜாதிய வெறியை வேரறுப்போம்;
மது, ஜாதிய வெறியைவிட பயங்கரமான மதவெறியை மாய்ப்போம்;
மனித நேயத்தை காப்போம் என்று இந்த 69வது சுதந்திர நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications