வந்து விட்டது கூகுளின் 2வது மொழி பெயர்ப்புத் "திருவிழா"
சென்னை: பிற மொழி வார்த்தைகளை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அந்த மொழிக்காரர்கள் மொழி பெயர்த்துச் சொன்னால்தான் நமக்கு அர்த்தம் புரியும். அந்த வகையில் இணையதளத்தில் பல மொழிபெயர்ப்பு உதவிகள் கிடைக்கிறது என்ற போதிலும் கூகுள் டிரான்ஸ்லேட் சேவை மகத்தானது என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வமான அரசு மொழிகள் உள்ளன. இதில் தமிழ் உள்பட 9 மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதிகள் கூகுளின் கூகுள் டிரான்ஸ்லேட் தளத்தில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 9 மொழிகளிலும் ஒரு மாபெரும் மொழிபெயர்ப்பு விழாவை நடத்தவுள்ளது கூகுள். இது தேசிய அளவில் நடத்தப்படும் 2வது மொழிபெயர்ப்பு விழாவாகும்.
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தொலைபேசி, லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன், கூகுள் டிரான்ஸ்லேட் குழுவினருடன் இணைந்து இதில் கலந்து கொள்ள முடியும்.
கடந்த ஆண்டு பல ஆயிரம் பேர் இந்த டிரான்ஸ்லேடத்தான் எனப்படும் மொழிபெயர்ப்பு விழாவில் கலந்து கொண்டனர். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பு வார்த்தைகளின் தரத்தை சரி செய்ய உதவினர். புதிய மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டனர்.
இந்த டிரான்ஸ்லேடத்தானில் டிசம்பர் 30ம் தேதி வரை பங்கேற்கலாம். இதில் கலந்து கொண்டு பங்களிப்போருக்கு ரிவார்ட் புள்ளிகள் கிடைக்கும். புள்ளிகளுக்கேற்ப பரிசுகளும் வழங்கப்படும்.
இன்னும் என்ன தயக்கம், யோசனை.. g.co/translatathon என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து கொண்டு மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க வேண்டியதுதானே... உங்கள் மொழியின் சரியான மொழி பெயர்ப்பு.. உங்களது உரிமை!
https://docs.google.com/forms/d/1hZss0XKTEYVHAyfxWdIYNEVaM2lDHnnKZfcJUljREZ4/viewform


Click it and Unblock the Notifications
