மங்கள்யான் விண்ணில் ஏவும் காட்சிகள் நேரடி ஒளிபரப்பு - திருப்பதியில் சிறப்பு பூஜை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் சாதனை முயற்சியான செவ்வாய்கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம் ஏவப்பட்டது நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. முன்னதாக மங்கல்யான் விண்ணில் வெற்றிகரமாக செயல்பட திருப்பதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பையும், அங்கு மீத்தேன் வாயு இருப்பது குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி-சி25 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2 மணி 38 நிமிடத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஏழுமலையானுக்கு பூஜை

ஏழுமலையானுக்கு பூஜை

இதற்கிடையே, ‘மங்கள்யான்' விண்கலம் வெற்றிகரமாக பறக்க வேண்டி ‘இஸ்ரோ' தலைவர் ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஞாயிறன்று இரவு அவர் திருமலைக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இஸ்ரோ தலைவருக்கு பிரதான நுழைவு வாயிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மாதிரி ராக்கெட்

மாதிரி ராக்கெட்

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். அப்போது பி.எஸ்.எல்.வி-சி25 ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதங்களில் வைத்து வழிபட்டார். விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பறக்கவும் வேண்டிக்கொண்டார்.

காளஹஸ்தியில் பூஜை

காளஹஸ்தியில் பூஜை

பின்னர் இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கவுண்டவுன்

கவுண்டவுன்

மங்கள்யான் விண்கலம் ஏவுவதற்கான 56 மணி 30 நிமிட நேர கவுண்ட்டவுன், ஞாயிறு காலை 6.08 மணிக்கு தொடங்கப்பட்டது. பின்னர் இன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

குவிந்த விஞ்ஞானிகள்

குவிந்த விஞ்ஞானிகள்

வெவ்வேறு மையங்களில் பணியாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஞ்ஞானிகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும் விண்கலம் ஏவப்பட்டதை உற்சாகத்துடன் தொலைக்காட்சிகளில் பார்த்து மகிழ்ந்தனர்.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்டதை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்தது. இஸ்ரோ நிறுவனமும் தமது இணையதளத்தில் www.isro.gov.in இந்த காட்சியை நேரடியாக ஒளிபரப்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+