இன்றைய நிலையில் தேர்தல் நடந்தால் திமுக 130 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும்: இந்தியா டுடே சர்வே

இன்றைய காலகட்டத்தில் தேர்தல் நடைபெற்றால் திமுக நிச்சயம் 130 இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே கார்வி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக ஆட்சி அமைக்கும்... பாஜக காலூன்றவே முடியாது - இந்தியா டுடே சர்வே

    டெல்லி : தமிழக அரசியல் சூழலில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கார்வி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணி 34 சதவீத வாக்குகளை பெறும்ட என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    ஜெயலலிதா உயிரிழ்ந்து ஓராண்டு ஆகும் நிலையில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கும் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் ஆளும் அதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 68 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற முடியும் என்று முடிவுகள் வெளிவந்துள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ்த அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இதே போன்று இன்றைய அரசியல் சூழலில் தேர்தல் நடைபெற்றால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குடன் தேர்தல் களம் கண்டால் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் 34 சதவீத வாக்கு வங்கியை திமுக பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு

    திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு

    2016 சட்டசபை தேர்தலின் போது திமுக 88 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போதைய சூழலில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

    ஆட்சியில் குறை

    ஆட்சியில் குறை

    சுமார் 65 சதவீத வாக்காளர்கள் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கருதுவதாக இந்தியா டுடே நடத்திய சர்வேயில் கூறியுள்ளனர். இதே போன்று ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசின் செயல்பாடுகளில் குறைபாடு இருப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர். அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் நாட்டு நடப்புகள் அனைத்தும் சிதைந்துள்ளதாகவும் மக்கள் கருதுவதாக சர்வே கூறுகிறது.

    ஆட்சி மீது அதிருப்தி

    ஆட்சி மீது அதிருப்தி

    அதிமுகவிற்கு இது சவாலான காலகட்டமாகவே இருக்கிறது. ஏனெனில் 2016ல் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களில் 3ல் ஒருவர் தற்போதைய நிலையில் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்றே கூறியுள்ளனர்.

    அதிமுக வாக்குகள் யாருக்கு போகிறது

    அதிமுக வாக்குகள் யாருக்கு போகிறது

    அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் 60 சதவீத வாக்காளர்களின் கவனம் ரஜினியின் பக்கம் திரும்பியுள்ளது, மேலும் இவர்களில் 26 சதவீதம் பேர் திமுகவிற்கு சாதகமாக திரும்பியுள்ளதாக போல் தகவல்கள் கூறுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+