ரஜினி 'தமிழன் இல்லை'... அரசியல் களத்தில் இருக்கும் மிகப்பெரிய சவால் இதுதான் என சர்வேயில் தகவல்!
ரஜினி தமிழர் அல்ல என்ற விஷயம் தான் அரசியல் களத்தில் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று இந்தியா டுடே சர்வேயில் தெரிய வந்துள்ளது.
டெல்லி : ரஜினி தமிழர் அல்ல என்ற விஷயம் தான் அரசியல் களத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், இதற்கான சரியான பதிலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி இருப்பதாகவும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் மக்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறி வரும் அரசியல் சூழலில் தற்போதைய நிலையில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தால் மக்களின் ஆதரவு யாருக்கு என்று இந்தியா டுடே, கார்வி இணைந்து சர்வே நடத்தியுள்ளது.
இந்த சர்வேயின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் மக்களின் செல்வாக்கு எந்த கட்சிக்கு இருக்கிறது என்பதில் திமுக முதல் இடத்தில் இருக்கிறது. தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 130 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்று சர்வே கூறுகிறது.

ஜெ. மறைவிற்குப் பிறகு வெற்றிடம்
இதற்கு அடுத்த படியாக தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதா என்று வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சுமார் 65 சதவீத மக்கள் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளனர்.

வெற்றிடத்தை நிரப்புவாரா ரஜினி?
இதே போன்று இந்த அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவாரா என்று வாக்காளர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று 40 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினியால் இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று 50 சதவீதம் பேரும், 9 சதவீதம் பேர் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ரஜினிக்கு இருக்கும் சவால்
ரஜினிக்கு தமிழர் இல்லை என்ற கோஷமே அவருக்கு அரசியல் களத்தில் கடுமையான சவாலாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு சரியான பதிலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி இருப்பதாகவும் மக்கள் கூறியுள்னர்.

ரஜினிக்கு வாய்ப்பு இருக்கிறது
எனினும் ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் சர்வேயில் பங்கேற்ற பாதி பேர் கூறியுள்ளதால் ரஜினிக்கான வாய்ப்பு மக்களிடம் இருப்பதாகவே கருதப்படுகிறது. தமிழகத்திற்கு நல்ல தலைமை தேவை என்று ரஜினி முன்எடுத்த முயற்சி தற்போதைய நிலையில் ஓரளவிற்கு அவருக்கு கைகொடுக்கும் என்பதே மக்களின் விருப்பமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications