இத்தனை செல்வாக்கு இருந்தாலும் மக்கள் ஆதரவு இவருக்கு மட்டும் குறைவது ஏன்?
சென்னை: ரஜினிகாந்த் குழப்பமான அரசியல்வாதியாக அறியப்படுவதாலேயே அவருக்கு மக்கள் ஆதரவு குறைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் முதல்வராக யார் வர வேண்டும் என்று முன்பு ஒரு முறை எடுக்கப்பட்ட சர்வேயில் 17 சதவீதம் பேர் ரஜினிகாந்த்தான் முதல்வராக வர வேண்டும் என விரும்பினர். ஆனால் தற்போது எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என 6 சதவீதம் மக்களே தெரிவித்துள்ளனர்.

அரசியல் சித்தாந்தம்
கமல்ஹாசனை காட்டிலும் பின்தங்கிய நிலையில் உள்ளார். இதற்கு காரணம் ரஜினிகாந்துக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறு வழியில் பயணிக்கின்றனர். ரஜினிகாந்த் என்னதான் பெரிய நடிகராக இருக்கும் போதிலும், ஏராளமான ரசிகர்கள் இருக்கும் போதிலும் அரசியல் சித்தாந்தம் என்ற வகையில் அவர் வேறுபடுகிறார்.

குறைகளை கேட்டு வருகிறார்
தமிழகம் என்பது சித்தாந்தத்தின் அடிப்படையில் உள்ள ஒரு உணர்வுபூர்வமான மாநிலம். டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தில் உள்ள ஆழமான திராவிட சித்தாந்தத்தின் தாக்கத்தை யாரலும் உணரவே முடியாது. ஆனால் கமல்ஹாசனை எடுத்துக் கொண்டால் அவர் இளைஞர்களுடன் பேசுகிறார், பொதுமக்களை சந்தித்து வருகிறார், அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.

இடத்தை
எனவே கமல்ஹாசன் முதல்வராக வேண்டும் என 8 சதவீதம் பேர் கூறியுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். இதே திமுகவில் கருணாநிதிக்கு பிறகு வெற்றிடம் அந்தளவுக்கு ஏற்படவில்லை. கொஞ்ச நஞ்ச இடத்தையும் ஸ்டாலின் நிரப்பி வருகிறார்.

ஒரே நிலைப்பாடு
இருப்பதிலேயே மிகவும் குழப்பமான அரசியல்வாதியாக ரஜினிகாந்த் உணரப்படுகிறார். அவரை பாஜக அரசியலுக்குள் இழுக்க பார்க்கிறது. எனினும் அவர் ஒரு சூழலில் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். மறு சூழலில் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிறார். நல்ல வாய்ப்புகளை அவர் இழப்பதாகவே கருதப்படுகிறது. மோடி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே கமலை காட்டிலும் ரஜினிக்கு ஆதரவு குறைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications