இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் கபாலி காய்ச்சல்.. டெலிகேட் பொசிஷனில் அஸ்வின்.. ரெய்னா ஹேப்பி
சென்னை: கபாலி ஃபீவர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களையும் ஆட்டிப் படைக்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் போட்டி ஆட சென்றுள்ள அஸ்வினுக்கு, ரஜினி படத்தை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் உள்ளதாம். ஆனால் டூர் போகாத சுரேஷ் ரெய்னாவுக்கு முதல் காட்சியே பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
கிரிக்கெட் ஸ்டார்களை உலகமே உற்று பார்க்கிறது. ஆனால் அந்த ஸ்டார்களோ நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரை வியந்து பார்க்கிறார்கள். கபாலி திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தயவால் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ரஜினியின் ஸ்டைல், மேனரிசம் பிடித்து போய்விட்டது. ரஜினி டயலாக்கான, ஒரு தடவ சொன்னா, ஜூஜுப்பி போன்றவற்றை வெளி நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பேச முயன்று, பல்பு வாங்கிய வீடியோ ஏற்கனவே வெளியானது. கபாலி ஃபீவருக்கும் இவர்கள் தப்பவில்லை
|
நெருப்புடா
முதல் நாள், முதல் காட்சி, திருவிழா தொடங்கட்டும்.. என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ரஜினி படத்தை இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்துள்ளார். நெருப்புடா, தலைவர் என்றெல்லாம் தமிழ் வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் டைப் செய்து வைத்து உணர்ச்சி பிழம்பாய் காட்சியளிக்கிறார் சுரேஷ் ரெய்னா.

டெலிகேட் பொசிஷன்
அஸ்வின் நிலைமையோ தர்ம சங்கடம். மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில், நைட் வாட்ச்மேனாக களமிறங்கி பேட் செய்துகொண்டுள்ளார் அவர்.

கில்லி விஜய்
இதற்கு நடுவேயும், கபாலி ஃபீவரில் நடுங்கத்தான் செய்கிறார். கில்லி திரைப்படத்தில் கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது விஜய் கதாப்பாத்திரத்தை ஹோமம் செய்ய வைத்திருப்பார்கள். அவரால் ஹோமத்தில் கவனம் செலுத்த முடியாது. கெரோசினை ஹோமகுண்டத்தில் ஊற்றிவிட்டு தப்பியோடுவார்.
|
அஸ்வின் குசும்பு
அஸ்வின் நிலைமையும், கும்ப்ளே, கோஹ்லியிடம் மாட்டிக்கொண்டு, கில்லி விஜய் போல போல இருப்பதாக ஒரு மீம் வெளியானது. அதை அஸ்வின் ரசித்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். கும்ப்ளே மற்றும் கோஹ்லி, அனில்கும்ப்ளே ஆகியோரும் இதை அறியும்படி அவர்கள் டிவிட்டர் ஹேண்டிலில் டேக் செய்துள்ளார் அஸ்வின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications