அர்ப்பணிப்பும், திறமையும் கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மறைவால் அதிர்ச்சி: பிரபு, ராதாரவி, விஜயகுமார்

ஸ்ரீதேவியின் மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று பிரபு, ராதாரவி, விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடிகை ஸ்ரீதேவி மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் | Oneindia Tamil

    சென்னை : நடிகை ஸ்ரீதேவியின் மறைவு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இழப்பால் வருத்தத்தில் இருப்பதாக நடிகர்கள் பிரபு, ராதாரவி, விஜயகுமார் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.

    தமிழ், இந்தி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் மிகச்சிறந்த படங்களில் நடித்தவர்.அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. பல்வேறு விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.

     பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்தி திரைப்பட இயக்குநர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், துபாயில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவியின் மறைவுக்கு நாட்டின் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

     எங்கள் குடும்ப நண்பர்

    எங்கள் குடும்ப நண்பர்

    நடிகர் பிரபு இதுகுறித்து கூறும்போது, மிகவும் திறமையான நடிகையான ஸ்ரீதேவியின் மரணம் என்னையும் என் குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழகுவதற்கு மிகவும் இனிமையான குணம் கொண்டவர். அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரிழப்பு. அவர்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் தவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

     கமல்ஹாசன் போல திறமை

    கமல்ஹாசன் போல திறமை

    நடிகர் ராதாரவி கூறுகையில், ஸ்ரீதேவி மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகை. அவரது மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது திரைப்படங்களில் நடிப்பின் மூலம் தனி அடையாளத்தைப் பதித்தவர். இந்த செய்தி கேட்டதில் இருந்து நான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர் நடிக்காத மொழியே இல்லை. கமல்ஹாசன் போலவே மிகச்சிறந்த திறமை கொண்டவர். அவரை இறைவன் நம்மிடம் இருந்து பிரித்துக்கொண்டது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.

     இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகை

    இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகை

    நடிகர் விஜயகுமார் கூறுகையில், தமிழகத்தில் இருந்து வட இந்தியா சென்று திரைத்துறையில் கோலோச்சிய மிகச்சிலரில் முக்கியமானவர் ஸ்ரீதேவி. எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவர் இல்லாதது, இந்திய திரை உலகத்திற்கே மிகவும் வருத்தத்திற்குரியது. இந்திய அளவில் நடிகைகளில் அவர் தான் சூப்பர் ஸ்டார். அவர் இல்லாதது பெரும் துயரம் தான் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+