ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை

Subscribe to Oneindia Tamil

Indian hockey legend Dhanraj Pillay joins Aam Aadmi Party
சென்னை: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ள தன்ராஜ்பிள்ளை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

1999-2000ல் நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற தன்ராஜ் பிள்ளை, 2000ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2002ல் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் தன்ராஜ் பிள்ளை பணியாற்றியுள்ளார்.

இந்திய ஹாக்கி வீரர்களான திலிப் திர்கே, பர்கத் சிங் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது தன்ராஜ் பிள்ளையும் அரசியலுக்கு வந்துள்ளார்.திலிப் திர்கே, கடந்த 2012ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அதே ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் சார்பில் போட்டியிட்ட பர்கத் சிங், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+