தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மிக மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!!
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இலங்கை வரை வளிமண்டலத்தில் நீடிக்கும் சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்கள்
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.8வரை கனமழை
அக்டோபர் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மழை குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபாலிடம் கேட்டறிந்தார்.

கேரளாவுக்கு எச்சரிக்கை
கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அங்கு வரலாறு காணாத மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications