அதிமுக அணியில் இருந்து வெளியேறிய இந்திய தேசிய லீக் திமுகவுக்கு ஆதரவு- கருணாநிதியுடன் சந்திப்பு!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய தேசிய லீக் தற்போது சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய தலைவர் முகமது சுலைமான் தமது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தேசிய லீக் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அண்மையில் அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இந்திய தேசிய லீக் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுக அணியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான், மாநிலத் தலைவர் பஷீர் அகமத் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை இந்திய தேசிய லீக் கட்சி ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தற்போது இந்திய தேசிய லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications