சிம்புவின் உருவப் படங்களை எரித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.. கைது செய்யவும் கோரிக்கை
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் உருவப்படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரைக் கைது செய்ய கோரியும் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பி வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் தியாகராய நகரில் சிம்புவின் வீட்டை முற்றுகையிட சென்றனர். ஆனால் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியதால் அவரின் உருவப்படங்களை தீவைத்துக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆபாசப் பாடலை வெளியிட்ட சிம்புவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கோவையைத் தொடர்ந்து சேலம், விருதுநகர், கோவில்பட்டி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருவருக்கும் எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க சிம்பு மற்றும் அனிருத் தரப்பில் முன் ஜாமீனுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications