மதுரையில் இருந்து டெல்லிக்கு விமான சேவை இன்று முதல் தொடக்கம்!
மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் இரண்டு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மதுரை: மதுரையில் இருந்து டெல்லிக்கு இரண்டு விமான சேவையை இன்று முதல் இண்டிகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் டெல்லியில் இருந்து மதுரைக்கு சென்னை மார்க்கமாக இந்த விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுரை விமான சேவை இண்டிகோ நிறுவனத்தின் 37 வது உள்நாட்டு விமான சேவையாகும். நாள்தோறும் 883 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்குகிறது.

இதில் தற்போது டெல்லி - மதுரை விமான சேவையும் இணைந்துள்ளது. அத்துடன் மதுரை-ஹைதராபாத் விமான சேவை வருகிற மார்ச் 26-ந் தேதி முதல் இயங்க உள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவன இயக்குனர் ஆதித்யா கோஷ் தெரிவிக்கையில், தென்னிந்தியாவில் எங்களது சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மதுரை சேவையை தொடங்கி உள்ளோம். ஆன்மீகம் , கலாச்சார நகரமாக மதுரை திகழ்கிறது என்றார்.
முன்னதாக இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்த புதிய விமானத்தை வாட்டர் சல்யூட் எனப்படும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், விமான நிலைய உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications