"இந்திர குஷ்பு".. இதென்ன கலாட்டா??
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடு போட்டால் ரோடு போடும் மக்கள் நிறைந்தது நம்ம தமிழகம். இந்திரா காந்தி போல இருக்கிறார் குஷ்பு என்று சொன்னாலும் சொன்னார்கள் இதோ போட்டோவே போட்டு விட்டார்கள் பேஸ்புக்கில்.
போட்டோ போட்டதோடு நிற்காமல், குஷ்புவுக்குப் புதுப் பெயரும் சூட்டி விட்டார்கள்.. அதாவது இந்திர குஷ்புவாம்.

குஷ்பு வடிவில் அன்னை இந்திரா காந்தியைப் பார்க்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை வைத்து இந்தப் புதுப் படத்தை உருவாக்கியுள்ளனர் போலும்.
இந்த போட்டோஷாப் மட்டும் இல்லைன்னா பலருடைய கற்பனைக் குதிரைகள் லாயத்திலேயே முடங்கிப் போயிருக்கும் போங்கள்.












Click it and Unblock the Notifications