டெல்லி நிர்பயா, கேரளாவின் ஜிஷா, சென்னை சுவாதி.. ஆணாதிக்க உச்சத்திற்கு இன்னும் எத்தனை பலி தேவை?
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டுள்ள விதம், ஆணாதிக்க உச்சத்தின் மற்றொரு வெளிப்பாடு என்கிறார்கள் மகளிர் நல ஆர்வலர்கள். இதற்கு காரணத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலையில் இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியரான சுவாதி மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதை சாதாரண முன்விரோத கொலையாக பார்க்க முடியாது. கொலை செய்யப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. இதுபோன்ற மனநிலையில் கொலையாளிகள் நாட்டுக்குள் உலவுவது மொத்த சமூகத்திற்கும் ஆபத்து என்பதே உண்மை.

கொடூர கொலை
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் அவரது பெண்ணுறுப்பை சிதைத்து குரூர வெறியை வெளிப்படுத்தி கொலை செய்தனர். இதற்கு காரணம், ஆண் நண்பரோடு சாலையோரம் அவர் நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தார் என்பதுதான்.

தண்டனை
நள்ளிரவு நேரத்தில் ஆண் நண்பரோடு எப்படி வெளியே வரலாம் என்ற கேள்வியும், அதற்கு நிர்பயா கொடுத்த பதிலடி பேச்சும், அந்த பேச்சுக்கு 'தண்டனை' கொடுக்க வேண்டும் என்ற ஆண் ஆதிக்க எண்ணமும் நிர்பயாவின் கொடூர கொலைக்கு காரணம்.

கேரளாவிலும்
இதேபோல கேரளாவில் சட்ட கல்லூரி மாணவி ஜிஷா, (ஆங்கில எழுத்தான எஸ் போன்ற வடிவுடைய) கதிர் அறுக்கும் அரிவாளை கோண்டு பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

சிரித்தால் கொலை
கொலையாளி அமீருல் இஸ்லாம் அளித்த வாக்குமூலத்தில், பெண் ஒருவரை தான் குளிக்கும்போது பார்த்து ரசித்ததாகவும், அதை ஜிஷா தட்டி கேட்டதோடு, பெண்களை திரட்டி விரட்டி அடித்ததாகவும், அப்போது அவர் கேலியாக சிரித்ததாகவும் அதுதான் கொலைக்கு காரணம் என்றும் கூறியிருந்தார்.

திமிராம், தண்டனையாம்
நாட்டை உலுக்கிய இவ்விரு கொலை சம்பவங்களிலும், 'பெண்ணின் திமிருக்கு' அளிக்கப்படும் தண்டனையாக கொலை பரிசளிக்கப்பட்டுள்ளது. அதிலும், பெண் உறுப்பை சிதைத்து ஆனந்த கூத்தாடியுள்ளனர் கொலையாளிகள். தங்களது பிறப்புக்கு காரணமாக இருந்ததை போன்ற ஒரு உறுப்பை, சிதைக்கிறோமே என்ற எண்ணம் இன்றி, பெண் திமிரை ஒடுக்கிவிட்டதாக நினைத்து மகிழ்ந்துள்ளனர்.
வாக்குவாதம்
சுவாதி கொலை சம்பவத்தில், அவரின் வாயை வேண்டுமென்றே வெட்டியுள்ளான் கொலையாளி. சுவாதியின் பற்கள் பிளாட்பாரத்தில் சிதறி கிடந்த கோர காட்சியை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அந்த கொலைக்கு முன்பாக கொலையாளி, சுவாதியுடன் கோபமாக பேசிக்கொண்டிருந்துள்ளான். சுவாதியும் ஏதோ திட்டிவிட்டு அங்கிருந்து நகர பார்த்துள்ளார்.
வாயில் வெட்டு
சுவாதி நகர ஆரம்பித்ததும், வெறி கொண்டு அவரை வெட்டியுள்ளான் கொலையாளி. அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காகவே வாயில் வெட்டியுள்ளான் அந்த கொடூரன். இதன்மூலம், 'பெண்ணின் பேச்சு திமிருக்கு' தண்டனை கொடுத்துவிட்டோம் என்ற 'திருப்தியில்' ரயில் நிலையத்தில் இருந்து அவன் சாவகாசமாக வெளியேறியுள்ளான்.

ஆசிட்டின் அடுத்த பரிணாமம்
பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இம்மூன்று கொலை சம்பவங்களிலும் வெளிப்படுத்துள்ளது என்பது பெண்ணியவாதிகளின் பார்வையாக உள்ளது. ஆசிட் அடித்து முகத்தை சிதைத்து 'பெண்ணுக்கு தண்டனை' கொடுத்து வந்த ஆண்களின் 'பரிணாம வளர்ச்சி' இதுபோன்ற கொடூரங்கள் என்கிறார்கள் அவர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications