தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.
கடல் காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும் என்பதால் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலமான இந்த தருணத்தில் கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் சராசரியை விட அதிகமாக மழை பெய்துள்ளது என்றனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications