சென்னை வந்தது வீரமரணமடைந்த பெரியபாண்டியின் உடல்! விமான நிலையத்தில் முதல்வர் அஞ்சலி!
கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர் வீரபாண்டியின் உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
Recommended Video

சென்னை: கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர் வீரபாண்டியின் உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளில் அஞ்சலி செலுத்தினர்.
கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை பிடிக்க சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்டோர் ராஜஸ்தானுக்கு சென்றிருந்தனர்.
நேற்று அதிகாலை கொள்ளையர்கள் பதுங்கியிருந்த பாலி மாவட்டம் ராம்புரா கிராமத்தில் தமிழக தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். நாதுராமை கையும் களவுமாக பிடித்து போலீசார் அவர்களின் கார் அருகே இழுத்து வந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நாதுராம்
அப்போது நாதுராமின் உறவினர்கள் தமிழக போலீசாரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி நாதுராம் சரமாரியாக சுட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி
இதில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வருகை
இந்நிலையில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

விமானத்தில் புறப்பாடு
காலை 8 மணிக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து பெரிய பாண்டியின் உடல் தனி விமானம் மூலம் புறப்பட்டது. பகல் 12 மணிக்கு பெரியபாண்டியின் உடல் சென்னையை வந்தடைந்தது.

விமானம் மூலம் தூத்துக்குடிக்கு
விமான நிலையத்திலேயே அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோ தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மற்றும் காவலர்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் பெரியபாண்டியின் உடல் மதுரை கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக பெரியபாண்டியின் உடல் எடுத்து செல்லப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான சாலைபுதூரில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications