திமுகவில் அங்கீகாரம் இல்லை என்று நான் சொல்லவே இல்லையே: குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர்கள் இந்திரா மற்றும் ராஜிவை பார்த்து தாம் வளர்ந்ததாகவும் திமுகவில் அங்கீகாரம் இல்லாததால் விலகியதாக கூறுவது தவறு என்றும் காங்கிரஸில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.டெல்லியில் சோனியாவை புதன்கிழமையன்று சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். பின்னர் நேற்று இரவு சென்னை திரும்பிய குஷ்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியை பார்த்து வளர்ந்தவள். காங்கிரஸ் உணர்வு எனது ரத்தத்தில் உள்ளது.

Inspired by Indira Gandhi, Rajiv: Khushbu

எனக்கு எந்த பதவி தரப்படும் என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படும். 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் எனது பணி என்ன? என்பதை கட்சி முடிவு செய்யும். நடிகர், நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

தி.மு.க.வில் எனக்கு அங்கீகாரம் தரவில்லை என்று நான் சொன்னதில்லை. இதற்கு காது, மூக்கு வைத்து கூறவேண்டாம். நான் எப்போதும் மதிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன்.

காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்துள்ளது. இலங்கை தமிழர்கள் நலன் உள்பட பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.

காங்கிரஸ் கட்சி பல தோல்விகளை சந்திப்பதால் ஒதுங்கியிருக்காது. வெற்றி, தோல்வி என்பது சகஜம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+