எலைட் கடைகளை நிறையத் திறக்கலாம்.. ஆலோசனை கூறும் உளவுப் பிரிவு போலீஸ்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்குத்தான் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதே தவிர எலைட் மதுக் கடைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்று தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூறியுள்ளது.
தமிழக அரசுக்கு இதுதொடர்பாக உளவுப் பிரிவு போலீஸார் அறிக்கை தயாரித்து அளித்துள்ளனர். இந்த அறிக்கையை உளவுப் பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் அரசிடம் கொடுத்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அபூர்வா வர்மா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதில் எலைட் கடைகளை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மால்களில்
தமிழக அரசு சில வருடங்களுக்கு முன்புதான் எலைட் மதுக் கடைகளை அறிமுகப்படுத்தியது. சாதாரண டாஸ்மாக் கடைகளைப் போல இல்லாமல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களில் செயல்படும்.

கொஞ்சம் ஒஸ்தி
டாஸ்மாக் கடைகளை விட இவை சற்று ஒஸ்தியானவை. வெளிநாட்டு சரக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. விலையும் கூட.

50க்கும் மேற்பட்ட கடைகள்
தமிழகம் முழுவதும் தற்போது 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த எலைட் கடைகள் உள்ளன.

கோவையில்தான் அதிகம்
இதில் கோவையில்தான அதிக அளவிலான எலைட் கடைகள் உள்ளன. அடுத்து மதுரை, திருச்சி, சென்னையில் அதிக அளவிலான கடைகள் உள்ளன.

போலீஸ் அறிக்கை
தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக மக்களின் மன நிலையை அறிந்துள்ள உளவுப் பிரிவு போலீஸார், மதுக் கடைகளை பாதி அளவுக்கு மூடி விட்டு எலைட் கடைகளை அதிகம் திறக்க பரிந்துரை செய்துள்ளது.

அரசு என்ன செய்யும்
உளவுப் பிரிவின் அறிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. விரைவில் மக்களுக்குப் பிடித்தமான செய்தியை அரசு சொல்லுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications