ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு "கொல்ல" முடிவடுத்த கிராமம்.. திருச்சி அருகே பகீர்!
திருச்சி: ஜாதி மாறி காதலித்ததால் ஊர்க்கூட்டம் போட்டு எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று திருச்சி போலீசில் இளம்பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் உமா, திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காதலனுடன் வந்து ஒரு புகார் மனுஅளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் சத்திரம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வருகிறேன். மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சத்தியராஜ் என்பவரும், நானும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
எனது காதலர் வேறு சமூகம் என்பதால் இதுகுறித்து அறிந்த எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோவையில் உள்ள மருதமலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இதை அறிந்த எனது பெற்றோர் ஆணவ கொலை செய்து விடுவதாக எங்களை மிரட்டுகின்றனர்.
இதுகுறித்து ஊர்கூட்டம் நடத்தி எங்களை கண்டுபிடித்து கொன்று விட வேண்டும் என பேசி முடிவு செய்துள்ளனர். ஆகையால் எனது பெற்றோரிடமிருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உமா அந்த மனுவில் கூறியுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications