காரைக்குடியில் இன்டராக்ட் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
காரைக்குடியில் இன்டராக்ட் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை இன்டராக்ட் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இண்டராக்ட் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் தொழில் சேவை தலைவர் ரோட்டேரியன் வி.ஆர்.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிவகங்கை மாவட்ட இன்டராக்ட் சங்கத் தலைவர் ரோட்டேரியன் கே.சி.குருசாமி இன்டராக்ட் சங்க மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

காரைக்குடி ரோட்டரி கிளப் பியர்ல் சங்கமம் துணை ஆளுநர் முத்துக்குமார் ஜெசிஸ் பயிற்சியாளர் ஏ.ஆர். தேவராஜன் காரைக்குடி ரோட்டரி கிளப் பியர்ல் சங்கமம் தலைவர் நாவுக்கரசு, நலந்தா ஜம்புலிங்கம் மற்றும் காரைக்குடி ரோட்டரி கிளப் பியர்ல் சங்கமம் பட்டயத் தலைவர் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

இந்த விழாவில் டி.தரணிதரன் இன்டராக்ட் சங்க தலைவராகவும், பி.ஜெயஜேசன் இன்டராக்ட் சங்க செயலாளராகவும், எஸ்.நெவி இன்பாண்ட்ரின் இன்டராக்ட் சங்க பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இன்டராக்ட் சங்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.தரணிதரன், பள்ளியில் நடக்கும் விழாக்களிலும், சமூக பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவதாக உறுதியேற்றுக் கொண்டார்.

மேலும், இவ்விழாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இன்டராக்ட் சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. அதோடு பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.5000, இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமேரிக்கா வாழ் இந்தியரான செல்வன் ஜெப்ரின் அன்னராஜ் இன்டராக்ட் சங்க மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications