சன்னிலியோன் இந்தியாவின் பிரதமர் ஆக தகுதி உடையவர் தான்!... டுவிட்டர் அலப்பறைகள்

பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு கேரள ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பை கலாய்த்து பல்வேறு அளப்பறைகள் டுவிட்டரில் உலா வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாலிவுட் நடிகை சன்னி லியோனை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டத்தை டுவிட்டரில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சன்னி லியோனின் கார், ரசிகர்கள் வெள்ளத்தில் சிறிய புள்ளிபோலத் தெரியும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், கேரளாவில் தனக்குக் கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது கார் கொச்சி ரசிகர்களின் அன்புக் கடலில் மிதந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிப்போனது சன்னி லியோனை பார்க்கக் கூடின கூட்டம். இந்தக் கூட்டத்தைப்பார்த்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கருத்து டுவீட்டுகளில் சில இதோ :

தமிழ்நாட்டுக்கு வந்திருந்தா?

நல்ல வேலை சன்னிலியோன் தமிழ்நாட்டுக்கு வரல/ ஓவியாவுக்கே ஆர்மி வச்சிருக்கவனுங்க சன்னிக்கு என்னென்ன வச்சிருப்பானுங்கலோ என்று நக்கலாக டுவீட்டியுள்ளார் ஒரு நெட்டிசன்.

#சன்னிலியோன் பேரவை

சன்னிலியோன் கேரளா கூட்டத்தப் பார்த்தா சன்னிலியோன் தான் அடுத்த கேரள முதல்வர். குவாட்டர் பிரியாணிக்காக கூடுனத விட இது அதிகம் என்று குறும்பாக பதிவிட்டுள்ளார்கள்.

தமிழில் சன்னி

பிக்பாஸ் தமிழில் சன்னிலியோனை வைத்து நடத்தலாம் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். சன்னி லியோனை வைத்து தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினார் டிஆர்பி எகிறிடும் என்று தங்களது அறிவுரைகளைக் கூறியுள்ளனர் சிலர்.

பிரதமர் ஆகலாம்

அதிக ரசிகர்கள் இருப்பதனாலயே ஒரு நடிகர் முதல்வர் ஆக முடியும் என்றால்..சன்னிலியோன் இந்தியாவின் பிரதமர் ஆக தகுதி உடையவர் தான் என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+