‘செல்’லின் செல்விகள் : செல்போன், ஆப்ஸ்.. அதிகம் பயன்படுத்துவது பெண்கள்தானாம்!
நாளை மகளிர் தினம். இந்த நேரத்தில் மகளிர் குறித்த ஒரு சுவையான செய்தி இது.. உலகம் முழுவதும் பெண்கள்தான் அதிக அளவில் செல்போன்கள், செல்போன் ஆப்ஸ் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று நீல்சன் ஒரு ஆய்வு மூலம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் உள்ளிட்டவற்றை ஆண்களை விட அதிக அளவில் பெண்கள்தான் கையிலும், காதிலும் வைத்துள்ளனராம்.
ஒரு அமெரிக்கர் சராசரியாக ஒரு வாரததஇற்கு 60 மணி நேரம் ஆன்லைன், டிவி, ரேடியோ, செல்போன்களில் பொழுதைக் கழிக்கிறாராம். சொல்கிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்வில் இடம் பெற்றுள்ள பிற சுவாரஸ்யங்கள் :

பெண்கள் தான் டாப்...
பெண்கள் 30 மணி நேரம் 58 நிமிடங்களை செல்போனில் கழிக்கிறார்களாம். ஆண்களின் நேர அளவு 29 மணி நேரம் 32 நிமிடங்கள். ஆண்களை விட இது ஒன்றரை மணி நேரம் அதிகமாகும்.

டேப்ளட்களில்....
டேப்ளட்களில் உள்ள ஆப்களை ஆண்களை விட அதிக அளவில், அதாவது 5 மணி நேரம் கூடுதலாக பெண்கள் பயன்படுத்துகிறார்களாம். மொபைல் இன்டர்நெட்டை ஆண்களை விட 2 மணி நேரம் கூடுதலாக பெண்கள் பயன்படுத்துகிறார்களாம்.

5 மணி நேரம்....
லைவ் டிவியைப் பார்ப்பதில் அமெரிக்கப் பெண்கள் சராசரியாக ஆண்களை விட ஐந்து மணி நேரம் கூடுதலாக செலவழிக்கிறார்களாம்.

அமேசானை சாப்பிட்ட ஆப்பிள்....
காம்ஸ்கோர் கணக்கின்படி, ஆப்பிள் போன்களின் ஆப்களை பயன்படுத்துவோர் 99 சதவீதம் பேர் உள்ளனர். அமேசான் 77 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications
