தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம்

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஸ்டீபன் ஜேசுபாதம் சென்னை சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கை:

IPS officers transferred

•டி.கல்பனா நாயக் -தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் டி.கல்பனா நாயக். தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

•மகேந்திர குமார் ரத்தோடு -தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. மகேந்திர குமார் ரத்தோடு, டி.ஐ.ஜியான இவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் தற்போது தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

•அருண் பாலகோபாலன் - நாங்குநேரி உதவி எஸ்பி பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று மதுரை நகர போக்குவரத்து பிரிவு துணை கமி‌ஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

•என்.ஸ்டீபன் ஜேசுபாதம் -சென்னை சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் எஸ்.பியாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

•பி.தங்கத்துரை -சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையர். கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

•ஆர்.ராமகிருஷ்ணன் - தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர். சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.

•எம்.துரை - கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி. இவர் கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமி‌ஷனராக பணியாற்றினார். தற்போது எஸ்.பி யாகாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

•ஜி.தர்மராஜன் - கோவை நகர தலைமையக துணை கமிஷனர். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியான இவர் கோவை நகர துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

•ஜெ.மகேஷ் - காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர் மதுரை நகர தலைமையக துணை போலீஸ் கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

•ஏ.மயில்வாகணன் - திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர். மதுரை நகர தலைமையக துணை கமி‌ஷனராக பணியாற்றிய இவர் திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமி‌ஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+