தீபாவளி தினத்தில் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் தரிசனம்: மதுரை-காசிக்கு சிறப்பு ரயில்
சென்னை: தீபாவளியன்று கங்கையில் புனித நீராடும் வகையில் ரயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியன் ரயில்வேயும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமும் இணைந்து ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் பாரத தரிசன சுற்றுலா ரெயில் திட்டத்தை கடந்த 13.5.2005லிருந்து நடத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மீக தலங்கள் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களை 200க்கும் அதிகமான சுற்றுலாக்களில் 85000க்கும் அதிகமான பயணிகளுடன் தனது பயண திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்த பயண திட்டத்தின் மூலம் வரும் 18ம்தேதி அன்று மதுரையிலிருந்து புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக அலகாபாத், காசி, கயா போன்ற புனித தலங்களை தரிசிக்கவும்,
தீபாவளியன்று காசியில் கங்கை நதியில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் தங்க அன்னபூரணியையும் தரிசித்து கங்கா ஆரத்தி, மிட்டாய் திருவிழாவையும் காண 10 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு ஒருநபருக்கு ரூ.5,995 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தில் 2ம் வகுப்பு ரெயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்குவதற்கு ஹால் வசதி, வாகன வசதி ஆகியவை அடங்கும்.
மேலும் உடைமைகளை ரயிலிலேயே வைத்துவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துச் செல்லும் வசதி, இன்னிசை மற்றும் அறிவிப்புகளை கேட்க ஒலிபெருக்கி வசதி, ஒவ்வொரு கோச்சுக்கும் தகுதிவாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், கோச் கிளீனர்கள் போன்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 044-64594959, 9003140681, 9840902920, காட்பாடி ரயில் நிலையம் -9840948484, மதுரை ரயில் நிலையம் 0452-2345757, 9003140714, கோவை ரயில் நிலையம் 9003140680 ஆகியவற்றில் தெரிந்துகொள்ளலாம். இணைய தள முகவரி, www.irctctourism.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications