மழைக்கு ஒழுகாத பேருந்துகள் உண்டா? கட்டண உயர்வுக்கு மக்கள் கேள்வி?
நஷ்டத்தை சரி செய்வதற்காக அரசு அதிரடியாக கட்டணத்தை உயர்த்தி இருக்கிறதே, அதற்கு ஏற்ப பேருந்துகளின் சேவை இருக்கிறதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Recommended Video

சென்னை: பேருந்துகட்டண உயர்வு அறிக்கப்பட்ட மறுகணமே மக்கள் முன்வைத்த கேள்வி, கட்டணத்திற்கு ஏற்ற சரியான சேவை வழக்கப்படுகிறதா? என்பதுதான். ஒருபக்கம் பேருந்துகளின் பராமரிப்பு, இன்னோருபக்கம் தேவைப்படும் தடத்தில் போதிய எண்ணிக்கையில் பேருந்து விடப்படுகிறதா என்பதுதான்.
சென்னையைப்பொருத்தவரை 730 தடங்களில் மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. 4000 பேருந்துகளில் தினமும் 50 லட்சம் பயணிகள் ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு செல்கிறார்கள். ஆனால், வளர்ச்சியடைந்த சென்னை நகரத்திற்கு ஏற்க பேருந்துகளின் தரம், எண்ணைக்கை, தடம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை, மதுரை, நெல்லை போன்ற இரண்டாம் கட்ட நகரகங்களிலும் இதே நிலைதான். கடந்த முறை கட்டண உயர்வை அறிவித்தபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. புறநகரங்களில் குறைந்தபட்ச கட்டணம் (15 கிலோ மீட்டருக்குள்) 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், போதிய எண்ணிக்கையில் பேருந்துசேவை கிடைப்பதில்லை எனவும் மக்கள் புலம்புகிறார்கள்.

மோசமான நிலையில்
தமிழகத்தில் மொத்தம் 20,023 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் முறையான பராமரிப்பு இன்றி, பழுதடைந்துள்ளதாகவும், மோசமான நிலையில் இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில், பெரும்பாலான பேருந்துகள் ஒழுகுவது ஏன் எனவும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

பேருந்துகளில் வசதி இருக்கிறதா?
சிறப்பான சேவை என்றால் என்ன? செலுத்தப்பட்டும் கட்டணத்திற்கு நிகரான சேவை, வசதிகள் தருவதுதான். ஆனால், தமிழகத்தில் இது நடக்கிறதா? ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து முறையாக நிறுத்தப்படுவதும், புறப்படுவதும் நடப்பதில்லை என்று குமறும் பயணிகள், பல நேரங்களில் நடத்துனர், ஓட்டுனர்களிடம் வசவுவாங்கி கட்டிக்கொள்ளவேண்டியதும் உள்ளது என புலம்புகின்றனர்.

பராமரிப்பு மோசமானதற்கு யார் காரணம்?
சில்லரைப்பிரச்னையால் தினமும் வாய்த்தகராறு, கைகலப்பு நடக்கும் சூழல் நீடிக்கிறது. அதற்கு பணியாளர்களை மட்டும் காரணமா? தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் பணியாளர்கள் போக்குவரத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளம் தரப்படுவதில்லை, ஓய்வு இல்லை, பயிற்சி தரப்படுவதில்லை என்பதால் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.

எப்படி மாற்றம் கொண்டு வருவது?
சகாயம் ஐ.ஏ.எஸ் அல்லது இறையன்பு ஐ.ஏ.எஸ் போன்ற ஊழல் செய்யாத, திறன்வாய்ந்த அதிகாரிகளிடம் போக்குவரத்து துறையை குறைந்தது 3 வருடங்களுக்கு ஒப்படைக்கவேண்டும். தொலைநோக்கு திட்டத்துடன் இந்த அதிகாரிகளின் உதவியுடன் போக்குவரத்து துறையை மீட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications